தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் குடியிருப்பில் நொடியில் பெயர்ந்து விழுந்த சிமெண்ட் மேற்கூரை பூச்சு.. காவலர்கள் அச்சம்.. 6 மாதத்தில் விபரீதம்.. - சென்னை காவலர் குடியிருப்பு நலச்சங்கம்

ஆவடி அருகே காவலர் குடியிருப்பில் சிமெண்ட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் குடியிருக்கும் காவலர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 3, 2023, 9:48 AM IST

காவலர் குடும்பத்தினர் அச்சம்

சென்னை:ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பு 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த குடியிருப்பில் சுமார் 900 வீடுகள் உள்ளன. அதில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் அவர்களது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 6 மாதங்களு முன்பே குடியேறினர். புதிய குடியிருப்பு என்றாலும் தரமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த காவலர் குடியிருப்பின் 5ஆவது மாடியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் பாக்கியலட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இன்று (மார்ச்.3) காலை பணிக்கு சென்றுள்ளார். அப்போது காவலரின் கணவர், மாமியார் மற்றும் 2 மகன்கள் வீட்டின் இருந்துள்ளனர்.

அப்போது, வீட்டின் படுக்கை அறையில் இருந்த சிமெண்ட் மேற்கூரை பூச்சி முழுவதும், திடீரென பெயர்ந்து கட்டில் மேல் விழுந்துள்ளது. இதனால், கட்டில் முழுவதுமாக சேதம் அடைந்தது. அந்த நேரத்தில் அனைவரும் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் அவசர அவசரமாக பெயர்ந்து விழுந்த சிமெண்ட் மேற்கூரை பூச்சுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இவ்வாறு காவலர் குடியிருப்பில் திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மற்ற காவலர் குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்து காவலர் குடியிருப்புகளையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் - 10 கிராம மீனவர்கள் வேலைநிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details