சென்னை:மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்டக் கல்விக் குழு அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வரவேற்றிருக்கிறது.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் ரத்தினசபாபதி, பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூறியதாவது, 'தேர்தல் வாக்குறுதி என்பதைத்தாண்டி, அயோத்திதாச பண்டிதர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரியார் உள்ளிட்ட சமூக நீதிப் போராளிகளின் கனவை நனவாக்கும் வகையிலும், தமிழ்நாடு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றிடும் வகையிலும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கக் கல்விச் சட்டம் 1920, அதன் தொடர்ச்சியாக தொடக்கக் கல்வி விதிகள் 1924, அதன் விளைவாக, கட்டணமில்லாக் கட்டாயக் கல்வியைத் தாய் மொழியில் வழங்கிய நீதிக் கட்சி ஆட்சியின் பாரம்பரியத்தில், சுயமரியாதைச் சுடரின் வெளிச்சத்தில், சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்விக் கொள்கையை, தமிழ் நாட்டின் பண்பாட்டிற்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ற வகையில் அமைந்திட, உயர் மட்டக் கல்விக் குழு அமைக்கும் அறிவப்பை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கேள்வி அன்று பதில் இன்று