தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள போலீஸாரால் பாலியல் வழக்கில் தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது - POCSO

கேரள மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கில் சிக்கி ஓராண்டாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவர், மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கேரள போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Absconding accused arrest in Chennai airport wanted by Kerala police in sex case
கேரள போலீசாரல் பாலியல் வழக்கில் தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது

By

Published : Feb 6, 2023, 6:35 PM IST

சென்னை: கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், கோஷ்துர்க் போலீஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர், அபூபக்கர் பட்டிலாத்து (38). இவர் மீது கோஷ்துர்க் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்குப்பதிவாகியது. இதையடுத்து கேரள போலீசார் அபூபக்கர் பட்டிலாத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தீவிரமாக தேடினர். ஆனால், இவர் போலீசிடம் சிக்காமல் கடந்த ஓராண்டாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததோடு வெளிநாட்டிற்கும் தப்பி சென்று விட்டார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது.

இதையடுத்து கேரள மாநிலம், காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபூபக்கர் பட்டிலாத்துவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அத்தோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் எல்.ஓ.சி போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து பயணிகளை அனுப்பி கொண்டு இருந்தனர். இதே விமானத்தில் கேரள மாநில போலீசால் போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான அபூபக்கர் பட்டிலாத்துவும் மலேசியாவில் இருந்து சென்னை வந்தார்.

குடியுரிமை அதிகாரிகள் அபூபக்கர் பட்டிலாத்து பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது கம்ப்யூட்டரில் இவர் கேரள மாநில போலீசால் போக்சோ வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று காட்டியது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அபூபக்கர் பட்டிலாத்துவை வெளியில் விடாமல் மடக்கி பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அத்தோடு சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

மேலும் போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்த போது சென்னை விமான நிலையத்தில் சிக்கியதை கேரள மாநிலம், காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து காசர்கோடு மாவட்ட தனிப்படை போலீசார், இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து குடியுரிமை அலுவலகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தலைமறைவு குற்றவாளி அபூபக்கர் பட்டிலாத்துவை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கேரளாவுக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ABOUT THE AUTHOR

...view details