சென்னை:கரோனா தொற்று பாதிப்பு குறித்துபொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று (ஜூன் 29) புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 25 ஆயிரத்து 657 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் கத்தார் நாட்டில் இருந்து வந்த இரண்டு நபர்கள் ஜெர்மனி, ஈராக், தஜிகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவர் மற்றும் டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 820 நபர்கள் என மொத்தம் ஆயிரத்து 827 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 6 கோடியே 59 லட்சத்து 37 ஆயிரத்து 305 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் மூலம் 34 லட்சத்து 73 ஆயிரத்து 116 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 33 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.