சென்னை எழிலகத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி. பொன்னையன் தலைமையில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு காணொளி அரங்கத்தில் “நீர் ( மாசுதடுப்பு மற்றும் கட்டுப்பாடு ) சட்டம் 1974. 1978 மற்றும் 1988ஆம் ஆண்டு திருத்தப்பட்டது குறித்து விவாதம் நடைபெற்றது.
1. சட்டத்தின்படி வாரியத்தின் செயல்பாடுகள்,
2. நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பகுதி,
3. பொதுவான கழிவுப்பொருள் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுதல்,
4. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் தரம் மற்றும் மாசுபாடு,
5. நதி மறு சீரமைப்பு மற்றும்
6. நீர் கொள்கை இலக்கு உள்ளடக்குவதில் நீர் பயனர்கள் சங்கத்தின் பங்கு ஆகியவை குறித்த செயல்பாடுகளின் மதிப்பீட்டாய்வு குழுக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி.பொன்னையன் கூறுகையில், "ஒரு நாட்டிற்கு நீர் மிக இன்றியமையாதது. இந்தியாவில் வீணாகும் வெள்ள நீரின் மூலம் சுமார் 30 லட்சம் கோடி மதிப்புள்ள நெல் உற்பத்தி செய்ய முடியும். இந்த நீர் தமிழ்நாட்டு மக்களின் தினசரி பயன்பாட்டிற்கு 476 ஆண்டுகளுக்குப் போதுமானது.
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கிராமப்புற ஒட்டுமொத்த பொருளாதார அளவை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பிடிக்கும் கொள்கையும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கு நற்பலனளிக்கும் குடிமாரமத்துத் திட்டத்திற்கு 2020-21ஆம் ஆண்டு சுமார் 500 கோடி ரூபாய் செலவில் 34 மாவட்டங்களில் மொத்தம் ஆயிரத்து 387 பணிகளை செயல்படுத்த ஆணை வழங்கியுள்ளார்.
இதில், 6ஆம் இலக்கினை 2030ஆம் ஆண்டுக்குள் அடைய துறைகளின் மத்தியில் ஒருங்கிணைப்பு மிக முக்கியம் என்றார்.
இதையும் படிங்க:ஆசிரியை அடித்து கண் பார்வை இழந்த மாணவன் உயிரிழப்பு!