அம்பத்தூர் அடுத்த பாடி, ஒலிம்பிக் காலனியில் தனியார் வங்கி இயங்கிவருகிறது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், பாடி, கலைவாணர் நகரில் வெவ்வேறு தெருக்களில் வசிக்கும் நண்பர்களான சுரேஷ் (38), அக்பர் (46), முபாரக் (32), முகமது கபீர் (32), நிஜாம் ராஜா(38) ஆகியோர் தங்களது வங்கி கணக்கில் ஆயிரத்து 252 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.24.77 லட்சம் பணத்தை பெற்று சென்றுள்ளனர்.
இதன்பிறகு, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நகைகளை வங்கி அலுவலர்கள் பரிசோதனை செய்தபோது, அவை அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து, கொரட்டூர் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் சுப்ரியா ரவிந்திரன்(31) புகார் செய்தார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர், அப்போது, அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்தது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நகைகளை அடகு வைத்த முகமது கபீர், வேறொரு வேலையாக வங்கிக்கு வந்துள்ளார்.