தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து - வேலைவாய்ப்பு அலுவலக பதிவு

10,12 ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து.

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து
பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து

By

Published : Jul 9, 2022, 12:26 PM IST

சென்னை:பள்ளிக்கல்வித்துறையில் பொதுத் தேர்வில் 10,12 ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு 2011 ம் ஆண்டு முதல் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர், செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் www.tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை இ-சேவை மையங்களிலும் மேற்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை 10, 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு அவரவர் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு, அனைவருக்கும் ஒரே பதிவு மூப்பு நாள் ஒரே நாளாக வழங்கப்பட்டது. மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு நீண்டதூரம் சென்று காத்திருந்து பதிவு செய்வதில் ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10,12 ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து.

இதையும் படிங்க:பொது தேர்வு எழுதிய மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details