தேசிய மாணவர் தினமாக உருவெடுக்கும் ‘அப்துல்காலம்’ பிறந்தநாள்!
சென்னை: அகில இந்திய பொறியியல் ஆசிரியர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில், அப்துல்கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மாணவர் தினம்
அகில இந்திய பொறியியல் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிறந்த ஆசிரியராகவும், விஞ்ஞானியாகவும் விளங்கியவர், இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் விளங்கிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதியை தேசிய மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதையும் படிங்க: குன்னூரில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி!