சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மாதம் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது.
270 கோடி ரூபாய் நஷ்டம்
சென்னை கலைவாணர் அரங்கில் 16ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இரண்டாவது நாளாக, ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆவின் பால் விலை குறைப்பின் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பால் வளத்துறை அமைச்சர் நாசர், 'ஆவின் பால் விலை மூன்று ரூபாய் குறைப்பால் அரசிற்கு 270 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆவின் பாலின் உற்பத்தியை உயர்த்தி, நஷ்டத்தை ஈடு செய்யப் பரிசீலித்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் - நிதியமைச்சர்