ஆவின் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், நுகர்வோருக்கு தரமான பால் விற்பனையை உறுதி செய்வதற்காக விலை உயர்வை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28இல் இருந்து நான்கு ரூபாய் உயர்த்தி ரூ.32க்கு விற்கப்படும். எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35இல் இருந்து ரூ.41க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆவின் பால் விலை அதிரடி உயர்வு!
சென்னை: தமிழ்நாடு அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் வரை உயர்த்தி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல், அனைத்து விதமான ஆவின் பால்களும் லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு திங்கள் முதல்(19.8.19) அமலுக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘பால் விலை உயர்வில் அரசியல் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.