தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் தேதி ஆவின் பால் பாக்கெட்டில் 12ஆம் தேதி என அச்சிடல்  - சென்னையில் அதிர்ச்சி - சென்னையில் நாளை தேதியில் விற்பனைக்கு வரும் ஆவின் பால் பாக்கெட்

சென்னை: சேலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் நாளைய தேதி (மே 12ஆம் தேதி) அச்சிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நாளை தேதியில் விற்பனைக்கு வரும் ஆவின் பால் பாக்கெட்!
சென்னையில் நாளை தேதியில் விற்பனைக்கு வரும் ஆவின் பால் பாக்கெட்!

By

Published : May 11, 2020, 3:50 PM IST

கரோனா வைரஸ் காரணமாக ஆவின் பால் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. சென்னை மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றிய உழியர்களுக்கு அடுத்தடுத்து கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல ஊழியர்கள் பணிக்கு வர தயக்கம் காட்டினர். இதனையடுத்து மாதவரம் பால் பண்ணையில் உற்பத்தை ஈடு செய்யும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பால் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

சென்னையில் நாளைய தேதியில் விற்பனைக்கு வந்த ஆவின் பால் பாக்கெட்

அதன்படி, சேலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பால் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை முகவரியை கொண்ட பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுவதாகவும், நேற்று 10ஆம் தேதி பேக்கிங் செய்யப்பட்ட பாலில் நாளைய தேதி அதாவது 12ஆம் தேதி தேதி அச்சிடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகர்வர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதால் பால் விரைவில் கெட்டுப்போய் வாடிக்கையாளர்களுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கும், பால் முகவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க...10 மாநிலங்களில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்

ABOUT THE AUTHOR

...view details