தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமூல் கேட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக நிர்வாகி-கைது செய்ய கோரிக்கை! - பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

மாமூல் கேட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக நிர்வாகியை கைது செய்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக நிர்வாகி  மாமூல் கேட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக நிர்வாகி  சென்னை செய்திகள்  tamilnadu chief minister  chennai news  chennai latest news  பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்  aavin milk management
மாமூல் கேட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக நிர்வாகி

By

Published : Jul 23, 2021, 2:06 PM IST

சென்னை: ஆவின் பாலகம் நடத்தும் பால் முகவரிடம் மாமூல் கேட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக நிர்வாகியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு, பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து ஆவின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் செட்டிபாளையத்தில் ஆவின் பாலகம் நடத்தி வரும் பால் முகவரான வேலுமணியிடம், திமுக கோயம்புத்தூர் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவராக இருக்கும் ராமசாமி, தினசரி 300 ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டி வருகிறார்.

மாமூல் தர மறுத்தால் பாலகம் நடத்த விட மாட்டேன் என தொடர்ந்து மிரட்டி வருகிறார். மேலும் வேலுமணி கணவனை இழந்த எழுதப்படிக்கத் தெரியாத பெண் என பாராமல், அவரிடன் வெற்று காகிதத்தில் கையொப்பம் வாங்கியுள்ளார்.

அத்துடன் ஆவின் பாலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை, மின்வாரிய ஊழியர்கள் துணையோடு துண்டிக்க வைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். கணவனை இழந்து நான்கு பிள்ளைகளோடு ஆவின் பாலகத்தை நம்பி பிழைப்பு நடத்தி வரும் பால் முகவர் பெண் என்றும், வயதானவர் என்றும் பாராமல் அவரிடம் மாமூல் கேட்டு அராஜகம் செய்யும் ராமசாமியை, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கரோனா நோய் தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக வாழ்வாதாரம் முடங்கிப் போயிருக்கும் நிலையில், திமுக நிர்வாகியின் அராஜகத்தினால் வேலுமணி பால் வணிகம் செய்திட கடும் சிரமப்பட்டு வருகிறார்.

எனவே அராஜகத்தில் ஈடுபட்ட ராமசாமியை கைது செய்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பால் முகவரின் பாலகத்திற்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கிடவும், அவர் எந்தவிதமான இடையூறுமின்றி பால் வணிகம் செய்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவன செய்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நெல்லையில் பாஜக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details