கடந்த 2014ஆம் ஆண்டு, ஆவின் பாலை விநியோகம் செய்யும் லாரிகளை இயக்கிவந்த ஒப்பந்ததாரர்கள் பாலை கொண்டு செல்லும் வழியிலேயே அதனை திருடிவிட்டு அதற்குப் பதிலாக தண்ணீரைக் கலப்படம் செய்வதால் ஆவின் நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு 23 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு ஒப்பந்ததாரர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ”2014ஆம் ஆண்டு ஆவின் பாலில் கலப்படம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட எட்டு ஆவின் நிறுவனப் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.