சென்னை: தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. அதோடு, பாலின் மதிப்புக்கூட்டுப் பொருட்களான தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், கோவா மற்றும் இனிப்புகளையும் விற்பனை செய்து வருகிறது.
கடந்த தீபாவளி பண்டிகையின் போது, ஆவின் நிறுவனம் 116 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்தது. இந்த நிலையில், ஆவின் நிறுவனம் புதிய முயற்சியாக கேக் தயாரிப்பில் இறங்க உள்ளது.