சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்திலுள்ள அனைத்து ஆவின் பாலகங்கள் மூலம் 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (Combo Box) ரூ.450-க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மக்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம், பதப்படுத்தப்பட்டு ஆரஞ்சு, பச்சை, நீல நிறம் எனப் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்ளிட்ட 225 வகையான பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாகத் தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க:கம்பேக் கொடுத்த 'காதல் மன்னன்' நாயகி மானு.. நடிகர் அஜித் குறித்து புகழாரம்!
இந்நிலையில், இந்த ஆண்டின் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை ஆவின் நிறுவனம் தொடங்கி உள்ளது. குறிப்பாகப் பண்டிகை காலத்தில், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, காஜூ கட்லீ, காஜூ பிஸ்தா போன்றவை இனிப்புகள் அதிக அளவில் விற்பனை ஆகும்.