ஆவின் மேலாண்மை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு (மார்ச் 22) உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் நாளைய தினம் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைத்திட ஏதுவாக பால் விநியோகப் பணிகளை முடுக்கிவிட ஆவின் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தங்கு தடையின்றி நாளை ஆவின் பால் கிடைக்கும்! - Aavin administration
சென்னை: நாளை ஆவின் பால் தங்குதடையின்றி கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
aavin
மேலும் அனைத்து ஆவின் நேரடி விற்பனை நிலையங்களிலும், பொதுமக்களுக்குத் தேவையான பால் மற்றும் பால் பொருள்கள் கிடைத்திடும் வண்ணம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, கூடுதல் பால் வழங்க ஆவின் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
பொது மக்களின் சேவையில் ஆவின் நிறுவனம் என்றும் அதிக அக்கறையுடன் செயல்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.