தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தை அபகரித்த அதிமுக பிரமுகர்: மீட்டுத் தரக்கோரி முதியவர் புகார் - மீட்டுத்தர கோரி முதியவர் புகார்

அதிமுக பிரமுகரும் முன்னாள் நகர மன்றத் தலைவருமான பூவை ஞானம் ஒரு கோடி ரூபாய் நிலத்தை ஆக்கிரமித்து, கொலை மிரட்டல் விடுத்துவருவதாகப் பாதிக்கப்பட்ட முதியவர் தனது மனைவியுடன் அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நிலத்தை அபகரித்த அதிமுக பிரமுகர் - மீட்டுத்தர கோரி முதியவர் புகார்
நிலத்தை அபகரித்த அதிமுக பிரமுகர் - மீட்டுத்தர கோரி முதியவர் புகார்

By

Published : Feb 4, 2022, 11:59 AM IST

சென்னை:பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ஞான கண்ணன். 72 வயதான இவர் அவரது மனைவி சாரதா (66) மகனுடன் அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், அதிமுக பிரமுகரும் பூந்தமல்லி முன்னாள் நகர மன்றத் தலைவருமான பூவை ஞானம் தனது ஒரு கோடி ரூபாய் நிலத்தை அபகரித்துவைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஞான கண்ணன் மனைவி சாரதாவிற்குச் சொந்தமான நிலத்தைப் பூவை ஞானம் 2004ஆம் ஆண்டு விற்பனை செய்துதருவதாக ஒப்பந்தம் செய்து நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.

அங்குள்ள விவசாய கிணற்றில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனையும் செய்து வருமானம் பார்த்துவருகிறார். தனது மனைவி, மகன் மீது பத்திரம், பட்டா, சிட்டா என அனைத்து ஆவணங்களும் உள்ளன.

கொலை மிரட்டல் விடும் அதிமுக பிரமுகர்

நிலத்தை அபகரித்த அதிமுக பிரமுகர் - மீட்டுத்தர கோரி முதியவர் புகார்

தனது நிலத்தைத் தருமாறு கேட்டால் தனக்கும், தனது மனைவி, பிள்ளைகளுக்கும் பூவை ஞானம் அடியாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுப்பதாகக் கூறினார். எனவே தனக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பூவை ஞானம் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவிலிருந்து வருகிறார்.

அதேபோல் அதிமுகவில் ஒன்றியச் செயலாளர் பதவியும், பூந்தமல்லி நகர மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். இதனால் தன் அரசியல் பலத்தை வைத்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவருவதாகவும் இதனால் உயிர் பயத்துடன் வாழ்வதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் உள்ள தங்களுக்கு நிலத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கைவைத்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்

முன்னாள் நகர்மன்றத் தலைவரான பூவை ஞானத்தின் மனைவி, மகன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் பூவிருந்தவல்லி நகராட்சியில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை

ABOUT THE AUTHOR

...view details