சென்னை:அமைந்தகரை அடுத்த மேத்தா நகரில் தலைமை இடத்தை கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம். இந்நிறுவனம் தங்களிடம் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் தொரும் 36,000 ரூபாய் வட்டி பணமாக தறப்படும் என்று தமிழகம் முழுவதும் விளம்பரம்செய்த்து
மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதன் கிழை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவணம், சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் சுமார் 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது. இதுகுறித்து பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக இருந்து வந்த ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவு ஆகிவிடனர். இதுதொடர்பாக 40 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜன், பேச்சிமுத்துராஜா, நடிகர் ரூசோ ஆகியோர் பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். பின் அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதைனையடுத்து, கிட்டதட்ட 61 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6 கோடியே 35 லட்சம் ரொக்கப் பணம், 1 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய், 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.