தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தின் 14ஆவது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன், தமிழ்நாடு போக்குவரத்து முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.
14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கவும்: ஆம் ஆத்மி - TN aap leader
சென்னை: 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி தமிழ்நாடு தலைவர் வசீகரன், போக்குவரத்து முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆம்ஆத்மி கட்சித் தலைவர் வசீகரன், "போக்குவரத்து, தொலைத்தொடர்பில் எந்த நாடு முழுமை பெறுகிறதோ அந்த நாடு தான் வளர்ந்த நாடாகும். நேற்று தஞ்சையில் பத்து மணிக்கு முன்னதாகவே அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டது. ஆம்னி பேருந்துகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சதி நடைபெற்று வருகிறது, என்றார்.
மேலும், 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றும் மூன்று வருடங்களுக்கு முன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கே ஒன்றரை ஆண்டுகள் கடந்தன. அதனால் இந்த ஆண்டிற்கு வருகின்ற 1ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே போக்குவரத்து செயலாளரை சந்தித்தாகவும்" அவர் தெரிவித்தார்.