தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த வே. ஆனைமுத்துவின் உடல் மருத்துவமனையில் ஒப்படைப்பு! - மறைந்த பேரறிஞர் ஐயா வே. ஆனைமுத்து

சென்னை: மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ஐயா வே. ஆனைமுத்துவின் உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

மறைந்த வே.ஆனைமுத்துவின் உடல் மருத்துவமனையில் ஒப்படைப்பு
மறைந்த வே.ஆனைமுத்துவின் உடல் மருத்துவமனையில் ஒப்படைப்பு

By

Published : Apr 7, 2021, 9:55 PM IST

பெரியார் பெருந்தொண்டரும் பெரியாரின் படைப்புகள் முழுவதையும் தொகுத்து சமுதாயத்திற்கு வழங்கியவருமான பேரறிஞர் ஐயா வே. ஆனைமுத்து (96) நேற்று (ஏப்.6) இயற்கை எய்தினார்.

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட ஏராளமான கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, இன்று (ஏப்.07) மாலை 5 மணியளவில் அவரது உடல் ராமச்சந்திரா மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவரது மனைவி சுசிலா அம்மையார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார். அவருடைய உடலும் இதே மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உயிரிழந்த எருதின் உடல், தாரை தப்பட்டையுடன் நல்லடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details