தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேங்கைவயல்: கிராம மக்களை காவல்துறையினர் Control செய்கின்றனர்: ஆம் ஆத்மி பரபரப்பு புகார் - Vengaivayal incident news

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தில், அந்த கிராம மக்களை காவல் துறையினர் தங்கள் கட்டுபாட்டில் வைத்து மன உளைச்சல் ஏற்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறியுள்ளனர்.

வேங்கைவயல் விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
வேங்கைவயல் விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு

By

Published : Apr 13, 2023, 8:42 PM IST

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளரிடம், ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான சங்கர் தலைமையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் சங்கர், “வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, எந்த நடவடிக்கைகளும் இதுவரை மக்களுக்காக எடுக்கவில்லை.

இன்று வரை கிராம மக்களை காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தால், ஒரு நபருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்ட விதியின்படி 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமும், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கருணை நிதியாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். இந்தத் தொகையைப் பெற, சட்ட உதவிகள் பெறக்கூட கிராம மக்களை அரசு அனுமதிப்பது இல்லை. கிராம மக்களின் செல்போன்களை காவல் துறையினர் பிடுங்கி வைத்துள்ளனர். இதனால் கிராம மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:வேங்கை வயல் விவகாரம்: குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும்... திருமாவளவன் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details