சென்னை ஆலந்தூர், ஆசர்கானா தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் கோகுல்ராஜ் (31), தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் (60) என்பவர் நேற்றிரவு 12 மணியளவில், குடித்துவிட்டு சரஸ்வதியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.
இதேபோல், தொடர்ந்து குடித்துவிட்டு வந்து திட்டும் தாய்மாமனின் செயலைக் கண்டு கோபமடைந்த கோகுல்ராஜ், அவரை வீட்டிலிருந்து விரட்டியுள்ளார். அப்போதும் அங்கிருந்து போகாமல் திட்டிக் கொண்டிருந்ததால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான கோகுல்ராஜ், கீழே கிடந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து எத்திராஜ் முகத்தில் குத்திக் கொடூரமாக தாக்கியுள்ளார்.