சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அம்மன் திருக்கோயில்களான சென்னை மயிலாப்பூர் அருள்மிகு முண்டக்கண்ணி அம்மன் திருக்கோயில், மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் வசதிகள் செய்யப்படும்.
அதேபோல் காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் வசதிகள் செய்யப்படும்.
திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு குடிநீர்வசதி, கழிப்பிட வசதி, பக்தர்கள் வரிசையில் செல்ல தேவையான வசதி, வாகன நிறுத்துமிடம், ஆகியவை அமைத்து தரப்படும். கூழ் வார்க்கும் இடத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும், பக்தர்கள் நேர்த்தி கடன் முடித்து சென்ற பின்பு திருக்கோயில் வளாகத்தை சுத்தமாக வைக்கவும், பொங்கல் வைக்கும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் தொடர்புடைய அம்மன் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.