தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசு உதவி செய்தால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்' - தங்க மங்கை கோமதி

சென்னை: தமிழ்நாடு அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்வேன் என்று தங்க மங்கை கோமதி தெரிவித்துள்ளார்.

தங்க மங்கை கோமதி

By

Published : Apr 26, 2019, 4:31 PM IST

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று தமிழ்நாடு திரும்பினார்.

அப்போது, சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

'திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்ற நான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்ததுகொண்டு தங்கம் வென்றுள்ளேன். தமிழகத்தில் வேலை செய்து தங்கம் வெல்வதுதான் என் விருப்பம். தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தது இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், என்னை போல் உள்ள ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும். திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும். பேருந்து வசதி கூட இல்லாத கிராமத்தில் இருந்துதான் நான் வந்துள்ளேன். எனவே, அனைவருக்கும் பேருந்து வசதி, உணவு, விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். தமிழ்நாடு அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்வேன்' என நம்பிக்கைத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details