சென்னை: வளசரவாக்கத்தை சேர்ந்தவர் வினோதினி(19). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் டிரெக்கிங் செல்வதை வழக்கமாக வைத்துவந்தார். அப்போது மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பின் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீதர் வினோதினியிடம் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கடந்த செப்.3ஆம் தேதி வீட்டில் வினோதினி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். அதன்பின் உறவினர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து அறிந்த வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இரு குடும்பத்தாரும் சேர்ந்து ஆறு மாதத்திற்கு பின் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக எழுதி கொடுத்துச் சென்றனர். இந்த நிலையில், தனக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை எனக் கூறி வினோதினி அம்பத்தூரில் ஐ.சி.எப் காலனியில் உள்ள காதலனின் பெரியப்பா வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டதால், தகவல் அறிந்த கொரட்டூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் வினோதினியிடம் சமரமரசமாக பேசி நாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியதை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: இஸ்லாமிய மக்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு கேள்விக்குறி - ஜெயக்குமார்