சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். பிரவீன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
அங்கு எண்ணூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் மாமாவின் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு வந்துசென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதையறிந்த சிறுமியின் தாயார் சிறுமியைக் கண்டித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் தேரடி பகுதியில் உள்ள மாமா வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றுவருவதாக சிறுமி கூறிவிட்டு பிரவீனுடன் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தார்.