சென்னை:மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவரது நண்பர்களுடன் பயணம் செய்தபோது, திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை அவரது நண்பர்களும், சக பயணிகளும் இணைந்து அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த போலிசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கடலூரைச் சேர்ந்த குரு சந்திரன் என்பவரது மகள் மோனிஷா என்பது தெரியவந்துள்ளது.
மேலும், மோனிஷா தனது நண்பர்களுடன் சென்னை மெரினா கடற்கரை சென்று, அங்கு பானி பூரி, சுண்டல் மற்றும் மக்காச்சோளம் ஆகியவை சாப்பிட்டு விட்டு மீண்டும் திருவான்மியூர் செல்ல மின்சார ரயிலில் பயணம் செய்தபோது மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரை பிடித்த சக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, பல துண்டுகளாக வெட்டிய இளைஞர் கைது