தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எனக்காக யாருமில்லை: குடும்பத்தினரை வெறுத்த இளம்பெண் தற்கொலை! - A young girl commits suicide

சென்னை: கொரட்டூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதம் காவல் துறையிடம் சிக்கியுள்ளது.

கொரட்டூரீல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை  குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை  A young girl commits suicide by hanging in Korattur  A young girl commits suicide  Teen commits suicide by hanging in family dispute
A young girl commits suicide by hanging in Korattur

By

Published : Jan 5, 2021, 12:09 PM IST

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (27). 12ஆம் வகுப்புவரை படித்துள்ள இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தாய், சகோதரிகளுடன் ஒன்றாக அவர் வசித்துவந்த நிலையில், அவர்களுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால், மனமுடைந்த அவர் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் காவல் துறையினர் உயிரிழந்த ரேவதியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையிலான காவலர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தற்கொலை செய்து கொண்ட ரேவதி எழுதிய மூன்று பக்க கடிதம் சிக்கியது.

சிக்கிய கடிதம்

அந்த கடிதத்தில், "எனது அம்மாவிற்கு என்னைவிட மற்ற இரு மகள்கள் மீதுதான் அக்கறை, பாசம் அதிகம். அவர், என்னை மகளாக மதிப்பதில்லை. நான் எல்லோரையும் வெறுத்துவிட்டேன். எனக்கு வாழ்க்கையும் வெறுத்து போய்விட்டது. எனக்கு அனைவரும் இருந்தும் இல்லாத ஒன்றுதான். எனக்கு யாருமில்லை, நான் அனாதையாக இருந்தேன். எனது சாவுக்கு பிறகு, என் முகத்தை குடும்பத்தினர் யாரும் பார்க்கக்கூடாது” என எழுதியிருந்தார். இதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆண்டிபட்டியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details