சென்னை:தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி மாநகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது. ஆலந்தூர் ஜி.எஸ்.டி ரோடு ஆசர் கானா திருப்பத்தில் உள்ள நிறுத்தத்திற்கு பேருந்து வந்தபோது, முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த மாநகரப் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.