தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார்! - Taramani Women Police Station

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் மீது பெருங்குடி பகுதியை சேர்ந்த பெண்மணி அடையாறு காவல் துனை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

tnpl
டி என் பி எல்

By

Published : Aug 15, 2023, 12:06 PM IST

சென்னை: பெருங்குடி பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பெண்மணி தமிழ்நாடு டி.என்.பி.எல் (TNPL) கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் மீது அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியதாவது,“தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு முதல் நட்பாக பழகி வந்ததாகவும், பின்னர் நாளடைவில் நட்பு காதலாக மாறி கடந்த 2019ம் ஆண்டு ராஜகோபால் சதீஷ் தன்னை காதலிப்பதாக தெரிவித்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெருங்குடியில் உள்ள தனது வீட்டிற்கு பலமுறை வந்து இருவரும் தனிமையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ராஜகோபால் சதீஷ் தன்னிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு, அவர் சொந்த ஊர் திருச்சிக்கு சென்று விட்டதும், இதையடுத்து சந்திப்பதற்கு நான் திருச்சி சென்று பார்த்த போது அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருச்சியில் இருந்து மீண்டும் சென்னைக்கு வந்தாகவும், அதன் பின் அவருடன் இருந்த தொடர்பை துண்டித்து விட்டு பெற்றோருடன் வாழ்ந்து வந்தாகவும் கூறினார். இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு தனது பெற்றோர்கள் பரத் என்பவருடன் திருமணம் நடத்தி வைத்தனர். இத் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், பரத்துடன் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராஜகோபால் சதீஷ் மீண்டும் தன்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசியதாகவும், அதில் அவர் கூறியதாவது,“மீண்டும் நம்முடைய பழைய நட்பு தொடர வேண்டும் எனவும், இருவரும் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல் இருவரும் வெளியே சென்று தனிமையில் இருக்க வேண்டும்” எனக் கூறியதாக புகாரில் தெரிவித்தார். இதனால் நாங்கள் கொடைக்கானல் சென்று தனிமையில் இருந்ததாகவும் அதில் நான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த விவகாரம் ராஜகோபால் சதீஷின் மனைவிக்கு தெரியவந்து, அவர் தன்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என மிரட்டுவதாகவும், புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை அடையாறு காவல் உதவி துணை ஆணையரிடம் பெண்மணி புகார் மனு அளித்துள்ளார்”. அதன் பெயரில் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"நீட்டை வைத்து அரசியல் செய்தது போதும்; இன்னொரு உயிர் போனால் திமுகதான் பொறுப்பு" - அண்ணாமலை விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details