சென்னை: சூளைப் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா. இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக (Makeup Artists) வேண்டும் என்ற ஆர்வத்தில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் மூன் பியூட்டி பார்லர் அகாடமி என்று அழகு கலை பயிற்சி நிறுவனத்திற்க்கு சென்றுள்ளார்.
இதையடுத்து பயிற்சி வகுப்பு கட்டணமாக ரூ.2,499 ரூபாய் செலுத்தி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்று வந்துள்ளார். அப்போது கம்மல் போட்ட காது துளைகளை அடைக்க என்ன செய்ய வேண்டும் என அழகு கலை பயிற்சி அளிக்கும் நிபுணர் மைமூனா என்பவரிடம் சுஷ்மிதா ஆலோசனை பெற்று வந்துள்ளார். இதையடுத்து ஏர்லோப் ரிப்பேரிங் லோஷன் என்கிற கிரீமை உபயோகப்படுத்தினால் போதும் கம்மல் போட்ட தொலை நாளடைவில் மறைந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சுஷ்மிதா, ஏர்லோவ் ரிப்பேர் லோஷன் (Earlobe Repairing Lotion) என்கிற கிரீமை பயன்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்கள் கழித்து இரண்டு காதுகளிலும் காயங்கள் ஏற்பட்டு பெரிதாகி உள்ளது. மேலும், காதின் கிரீம் பூசிவரப்பட்ட பகுதி அழுகிய நிலைக்கு போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுஷ்மிதா இது குறித்து மைமூனாவிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கு முறையான பதில் சொல்லவில்லை என பாதிக்கப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.