சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. சென்னை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கி வருகிறார். இவருக்கு மீரா மற்றும் லாரா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.18) இரவு அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று (செப்.19) அதிகாலையில் விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து, தனது மகளின் உடலை மீட்ட விஜய் ஆண்டனி உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மீரா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிகாக வைக்கப்பட்டது.