தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை ஏமாற்றிப்பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது! - teenager arrested under the POCSO Act

16 வயது சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

By

Published : Aug 11, 2022, 3:07 PM IST

சென்னையைச்சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் இளைஞர் ஒருவர் ஆசை வார்த்தைக்கூறி வந்துள்ளார்.

அவர் கூறியதை நம்பி சிறுமி அவருடன் பழகியுள்ளார். இதைப் பயன்படுத்தி அந்த சிறுமியை இளைஞர் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமான சிறுமிக்கு சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் சிறுமியை அந்த இளைஞர் ஏமாற்றியது உறுதியானது. இதைத் தொடர்ந்து, போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தாம்பரம் மேம்பாலத்தில் முறிந்து விழுந்த மின் கம்பம்

ABOUT THE AUTHOR

...view details