தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள வங்கியில் திடீர் தீ விபத்து - important bank documents were burut

சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள வங்கியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு கணினிகள் உள்பட முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின.

சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள வங்கியில் திடீர் தீ விபத்து
சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள வங்கியில் திடீர் தீ விபத்து

By

Published : Oct 22, 2022, 10:32 AM IST

சென்னை என்.எஸ்.சி போஸ் சாலை மிண்ட் சந்திப்பில் உள்ள மூன்று மாடி கொண்ட கட்டடத்தின் முதலாவது மாடியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கில் இன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென கரும்புகை கிளம்பியது. அதன்பின் தீப்பிடித்துள்ளது.

உடனே வங்கியில் பாதுகாப்பில் பணியிருந்த ஏழுமலை தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் பேரில் ராயபுரம், தண்டையார்ப்பேட்டையில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீயானது மளமளவென பரவியது. சுமார் 1 மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வங்கியிலிருந்த 4 கணினிகள், பாஸ்புக், செக் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின. இந்த தீவிபத்து தொடர்பாக பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மின்கசிவு காரணமாக வங்கியில் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க:லஞ்ச வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் வீட்டில் ரூ.7 லட்சம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details