தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஐடி வளாகத்திற்குள் மான்கள் இறப்பு விவகாரம்: ஐஐடி விளக்கம் - ஐஐடி வளாகத்திற்குள் மான்கள் இறந்ததாகக் கூறிய குற்றஞ்சாட்டிற்கு ஐஐடி தரப்பு படிளடி

ஐஐடி வளாகத்தில் 2021 நவம்பரில் ஒரு நாய் கடித்ததில் பிளாக் பக் (Black buck) ரக மான் ஒன்று இறந்துபோனது. சமீபத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் வெறிகொண்ட நாய் ஒன்று மானைத் துரத்தும் காட்சி காணொலியாக வெளிவந்தது.

ஐஐடி வளாகத்திற்குள் மான்கள் இறந்ததாகக் கூறிய குற்றஞ்சாட்டிற்கு ஐஐடி தரப்பு படிளடி
ஐஐடி வளாகத்திற்குள் மான்கள் இறந்ததாகக் கூறிய குற்றஞ்சாட்டிற்கு ஐஐடி தரப்பு படிளடி

By

Published : Feb 8, 2022, 7:03 AM IST

சென்னை: இது குறித்து ஐஐடி நிறுவனம், "ஐஐடி வளாகத்தில் 15-16 நாய்கள் சுற்றித் திரிந்துவருகின்றன. இந்த நாய்களால் மான்கள், மரப்பள்ளிகள் பாதிக்கப்பட்டுவருகின்றன. பல வகையான பறவைகள், ஊர்வன, விலங்குகள், பாலூட்டிகள் ஆகியவை கிண்டி பன்னாட்டுப் பூங்கா, ஐஐடி வளாகம், அதன் தொடர்ச்சியான பகுதிகளில் நடமாடிவருகின்றன. இதை ஊடகங்கள் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

ஐஐடி வளாகத்திற்குள் ஏதேனும் மான் இறந்துபோனாலோ அல்லது காயமடைந்தாலோ அதை வனத் துறையினர் உடனே வளாகத்தை விட்டு வெளியே கொண்டுசெல்வார்கள். அவற்றின் உடற்கூராய்வு முடிவுகள் குறித்து வனத் துறைதான் தெரிவிக்க வேண்டுமே தவிர ஐஐடி வளாகம் அல்ல.

காயமடைந்த அல்லது இறந்த விலங்குகளின் உடற்கூராய்வு ஆவணங்கள் ஐஐடியிடம் இல்லை, ஆகையால் அவர்கள் இதற்குப் பொறுப்பேற்க முடியாது. இதில் பெரும் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு தன்னார்வ விலங்குகள் நலத்தில் ஆர்வம்கொண்ட நிறுவனம் மான்களைக் காயப்படுத்திய நாய்களை ஐஐடி வளாகத்தை விட்டு அகற்றக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்ததுதான்.

மான்களின் இறப்பு குறித்த புள்ளிவிவரம்

ஐஐடி கல்லூரி வளாகத்தைப் பொறுத்தவரையில் நெகிழிக் குப்பைகளை வளாகத்திலிருந்து அகற்ற பல்வேறு சரியான முடிவுகளை எடுத்துள்ளது. மேலும், அங்கே உலவும் மான்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது.

புள்ளிவிவரத் தகவலின்படி, ஐஐடியில் இறந்த மான்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளுக்கு கீழே வருமாறு:

2018 - 96

2019 - 79

2020 - 83

2021 - 53

மேலே குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்களில் நாய்களால் தாக்கப்பட்டு காயமடைந்த மான்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், வனத் துறையினரிடம் பேசுகையில் நாய்களால் தாக்கப்பட்டு இறந்த மான்களின் எண்ணிக்கை 2020இல் 28ஆக இருந்து இப்போது வெறும் ஐந்தாகக் குறைந்துள்ளது எனத் தெரியவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:'சோத்துக்குள்ள கறியா.... கறிக்குள்ள சோறா' - ராசிபுரத்தில் விடிய விடிய நடந்த கறிவிருந்து

ABOUT THE AUTHOR

...view details