தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? - விஜயகாந்த் கேள்வி - A statement issued by Vijayakanth condemning the Tamil Nadu government

சென்னை: ஊரடங்கு உத்தரவு இன்னும் முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

vijayakant
vijayakant

By

Published : May 8, 2020, 10:01 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஊரடங்கு உத்தரவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், பள்ளி, கல்லூரி மற்றும் கோயில்கள், தொழிற்சாலைகள், வியாபாரத் தலங்கள் திறக்கப்படாத நிலையில், டாஸ்மாக் கடைகளை மட்டும் திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஒவ்வொரு குடும்பத்தின் வருவாயை கருத்தில் கொள்ளாமல், அரசு தனது வருவாயை மட்டும் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மதுப் பிரியர்களின் குடும்பத்தில் கரோனா தொற்று அதிகரிக்கவும், குடும்ப வன்முறைகள் பெருகவும் டாஸ்மாக் கடைகள் காரணமாக அமைந்துவிடும். ஆதார் அட்டை வைத்திருக்கும் நபருக்கு ஒரு மது பாட்டில் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், ஏராளமான மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் வாங்கிச் செல்வதை பார்க்கமுடிகிறது. கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதன் மூலம் ஏழை மக்களின் வருவாய் பாதிக்கப்படும் நிலையில், அரசுக்கு இரட்டிப்பு வருவாய் கிடைப்பதை கண்டிக்கத்தக்க ஒன்றாக பார்க்கிறேன்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. மதுக்கடைகளை திறக்கவேண்டும் என யாரும் கோரிக்கை விடுக்காத பட்சத்தில் அரசு தாமாக முன்வந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அவசியம் என்ன? என்று அனைவரிடத்திலும் கேள்வி எழும்புகிறது. எனவே, தமிழ்நாட்டில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மது நமக்கு தேவைதானா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை

கடந்த 43 நாள்களாக ஊரடங்கை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு, மதுபானக் கடைகள் திறப்பின் மூலம் அவப்பெயரே கிடைக்கும் என்பதால், தமிழ்நாட்டில் மதுக் கடைகளை மூட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'மதுக்கடைகளை திறந்ததே திமுக தான்' - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details