சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார் என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.
கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை (டிச.29) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படுகிறது.