தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனது மகள் வழக்கு விசாரணையை தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் - கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் - டிஜிபி

சிபிசிஐடி விசாரணையில் நம்பகத்தன்மை இல்லையெனவும், தனது மகள் இறப்பின் வழக்கு விசாரணையைத் தனிக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவரது தாயார் டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

தனது மகள் ஸ்ரீமதி வழக்கு விசாரணையை தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்
தனது மகள் ஸ்ரீமதி வழக்கு விசாரணையை தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்

By

Published : Oct 20, 2022, 5:45 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்குத் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நம்பகத்தன்மையுடன் இல்லை எனவும்; தனிக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் எனவும் மாணவியின் தாயார் செல்வி இன்று டி.ஜி.பி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் இதுகுறித்து பேசிய அவர், 'தனது மகளின் மரணம் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி ஒருதலைப் பட்சமாக விசாரித்து வருகிறது.

மேலும், சம்மன் எதுவும் அனுப்பாமல் தனது மகள் மரணத்தில் சம்மந்தமே இல்லாத தங்கள் உறவினர்களை மணிக்கணக்கில் காக்கவைத்து விசாரிப்பதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களை விரைந்து விசாரித்து முடித்து அனுப்பி வைக்கிறது’ எனவும் அவர் கூறினார்.

மேலும், சி.பி.சி.ஐ.டி அலுவலர்கள் விசாரணையின்போது தனது உறவினர்களிடம் தனதுமகளின் மரணம் தற்கொலை என ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாகவும் அவர் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினால் பல உண்மைகள் தெரியவரும் என்ற அவர், ஆனால் அதற்குப் பதிலாக அலுவலர்கள் தனது உறவினர்களின் செல்போனை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தங்களுக்கு சி.பி.சி.ஐ.டியின் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை எனவும், தனியாக ஒரு குழு அமைத்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில், மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரது மேற்பார்வையில் பாரபட்சமற்ற முறையில் புலன் விசாரணை நடத்த வேண்டும் எனவும், கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக டிஜிபியிடம் மனு அளித்துள்ளதாகவும், அடுத்ததாக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details