தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே புறப்படுவார்.. கோபாலபுரம் நோக்கி ஒரு பாதயாத்திரை - அண்ணாமலை ஆவேசம்! - Udhayanidhi DMK

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே புறப்படுவார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே புறப்படுவார்.. கோபாலபுரம் நோக்கி ஒரு பாதயாத்திரை - அண்ணாமலை ஆவேசம்!
தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே புறப்படுவார்.. கோபாலபுரம் நோக்கி ஒரு பாதயாத்திரை - அண்ணாமலை ஆவேசம்!

By

Published : Jul 5, 2022, 8:17 PM IST

Updated : Jul 6, 2022, 2:27 PM IST

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அண்ணாமலை, "உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், இங்கேயும் ஒரு ஷிண்டே புறப்படுவார். 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நிச்சயம் 25 எம்பிக்களை பாஜக உருவாக்கும். 25 எம்பிக்களை நாம் உருவாக்கினால் தான், 150 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியும்.

பெட்ரோல், டீசல் வரியை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். அதில் 5 ரூபாய், 4 ரூபாய் குறைப்பதாக கூறியிருந்தனர். பெட்ரோலில் மட்டும் 3 ரூபாய் குறைத்துள்ளனர். டீசலில் 1 ரூபாய் கூட குறைக்கவில்லை; பெட்ரோலில் 2 ரூபாய் குறைக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளதை நீங்கள் குறைக்கவில்லை என்றால், உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றுதானே அர்த்தம்.

தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே புறப்படுவார்.. கோபாலபுரம் நோக்கி ஒரு பாதயாத்திரை - அண்ணாமலை ஆவேசம்!

அதைக் கேட்கக்கூடிய கடமை எதிர்கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவுக்கு இருக்கிறது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால், ஜனவரி 1 ஆம் தேதி பாதயாத்திரை தொடங்கி டிசம்பர்31 ஆம் தேதி கோபாலபுரம் பகுதியில் பாதயாத்திரை முடிவடையும்.

ஒரு வருடம் குடும்பம், சம்பாத்தியம் ஆகிய அனைத்தையும் விட்டுவிட்டு பாதயாத்திரையில் இறங்க பாஜக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து மாதம் அதற்காக தயாராகுங்கள்" என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:ராகுல்காந்தியின் பேச்சை திரித்து கூறிய விவகாரம் - தொகுப்பாளரை கைது செய்ய முயன்ற போது இரு மாநில போலீசார் வாக்குவாதம்

Last Updated : Jul 6, 2022, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details