தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா - ஆளுநர்

மெட்ரோ ரயில் பணிகள் காரணத்தால் இந்தாண்டு குடியரசு தினம் காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா
காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா

By

Published : Jan 5, 2023, 10:48 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயளாலர் ஜெகநாதன் தலைமையில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆண்டாண்டு காலமாக தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் மூவர்ண கொடியேற்றுவார். அதன் பிறகு தமிழக அரசின் சாதனையை வெளிப்படுத்தும் துறைகால் சார்ந்த அலங்கார ஊர்திகள், அணிவகுப்புகள் நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் காந்தி சிலையைச் சுற்றி நடைபெறுவதால் அங்கு நிகழ்ச்சி நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாற்று இடம் தேர்வு செய்வதற்காக பொதுத்துறை செயலாளர் தலைமையில் பொதுப்பணித்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, மற்றும் பல துறைகளின் உயர் அதிகாரிகள் இந்திய ராணுவத்தின் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தா இல்லம் அருகில் இந்தாண்டு குடியரசு தின விழா நடத்தலாமா அல்லது உழைப்பாளர் சிலை அருகில் நடத்தலாமா என ஆலோசிக்கபட்டு, உழைப்பாளர் சிலை அருகில் நடத்த திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 2040-ம் ஆண்டில் சென்னையில் 232 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் உமிழ்வு

ABOUT THE AUTHOR

...view details