தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘5ஜி’ அலைக்கற்றை ஏலத்தில் மோசடி - ஆ. ராசா பரபரப்பு குற்றச்சாட்டு... முழுவிவரம்!

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharatஆ. ராசா
Etv Bharat ஆ. ராசா

By

Published : Aug 3, 2022, 9:50 PM IST

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசுகையில், “2ஜி அலைக்கற்றையில் குரல் மட்டும்தான் சென்றடையும். 3ஜி அலைக்கற்றை மூலம் வீடியோக்களைப் பார்க்க முடிந்தது.

4ஜி அலைக்கற்றையில் அதன் திறன் இன்னும் அதிகரித்தது. 5ஜி அலைக்கற்றை அதைவிட இன்னும் திறன் வாய்ந்தது. 5ஜி அலைக்கற்றையில் நீங்கள் தேடும் விஷயங்கள் எல்லாம் ஒரு நொடியில் வந்துவிடும். அந்தத் திறன் அடிப்படையில் பார்த்தால் 5ஜி அலைக்கற்றை ஏலம் 5 லட்சம் கோடி ரூபாய் அல்லது 6 லட்சம் கோடி ரூபாய்க்குச் சென்றிருக்க வேண்டும். நான்கைந்து நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டுச்சதி செய்துவிட்டதா... எங்கு தவறு நடந்திருக்கிறது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

2ஜி புகார் ஒரு பெரிய மோசடி. 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம்விடப்படும் என்று மத்திய அரசு கூறிய 5ஜி அலைக்கற்றை 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. மீதிப்பணம் எங்கு சென்றது.

ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக வினோத் ராய் என்கிற தனிமனிதனைப் பயன்படுத்தி, சி.ஏ.ஜி என்கிற அரசியல் சட்ட அமைப்பைப் பயன்படுத்தி, அதற்குப் பின்னால் இருந்தவர்கள் மிகப்பெரிய சதியை தீட்டினார்கள். இதனை என் புத்தகத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இதுவரை இது குறித்து வினோத் ராயிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை" என்றார்.

இதையும் படிங்க:கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் - மெட்ரோ ரயில்வே இயக்குநர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details