சென்னை: கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் கடந்த ஆண்டு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டனர். பின்னர் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வந்தது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க மான்டசரி பயிற்சி முடித்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை நடத்த தற்காலிகமாக உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்களும் பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டனர். ஆகையால் தற்போதைய நிலையில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.