தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் அருகே கார் திருடியவர் கைது - பல்லாவரம் அடுத்த பம்மலை சேர்ந்த நிக்சன்

தாம்பரம் அருகே சோலையூரில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.5லட்சம் மதிப்புள்ள காரை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரை திருடிய நபர் கைது
தாம்பரம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரை திருடிய நபர் கைது

By

Published : Sep 21, 2022, 6:29 AM IST

சென்னை:தாம்பரம் அடுத்த சேலையூர் பாபுஜி தெருவில் வசித்து வருபவர் கிருபா(35). இவர் தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். கிருபாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கிருபா சென்னை சூளைமேட்டில் தனியார் வங்கியில் பணிபுரிவதால் அங்கேயே வீடு வாடகை எடுத்து கடந்த பத்து நாட்களாக தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் சேலையூரில் உள்ள அவரது வீட்டில் அருகில் வசிப்பவர்கள் கிருபாவை தொலைபேசியில் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபா உடனடியாக சேலையூரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு மேலும் பீரோவை உடைத்து துணிகள் கலைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பின்னர் வெளியே வந்த கிருபாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா பிரியோ கார் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து கிருபா சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளையன் வீட்டிலிருந்து காரை கொண்டு செல்லும் வழியில் ஒவ்வொரு சிசிடிவி காட்சிகளாக நோட்டமிட்டு பல்லாவரம் பால் சிக்னல் அருகே போலீசார் காரை மடக்கி பிடித்து காரில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல்லாவரம் அடுத்த பம்மலை சேர்ந்த நிக்சன்(25) என்பது தெரியவந்துள்ளது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை,பணம் திருட சென்றதாகவும், ஆனால் பீரோவில் நகை,பணம் எதுவும் இல்லாததால் விரக்தியில் இருந்த போது வீட்டின் படுக்கை அறையில் காரின் சாவி இருப்பதை பார்த்து அதை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளியே இருந்த காரை திருடி சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நிக்சன் மீது ராஜபாளையம், விருதுநகர், ஸ்ரீவைகுண்டம் போன்ற காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நிக்சன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:காரைக்குடி அருகே நாட்டு துப்பாக்கியால் மாமனாரை சுட்ட மருமகன்

ABOUT THE AUTHOR

...view details