சென்னை அயனாவரம் பணிமனை அருகே சாலையோரம் வசித்து வருபவர் சுகுமாரன் (48). இவர் அப்பகுதியிலுள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளி அருகே சுற்றித் திரிந்துள்ளார்.
இந்நிலையில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்த மாறன் என்பவரது செல்ஃபோன் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த மாறன் அங்கு சுற்றித் திரிந்த சுகுமாரன்தான் செல்ஃபோனை திருடியிருக்கக்கூடும் என நினைத்துள்ளார்.
பின்னர், மாறன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுகுமாரனை கத்தியுடன் விரட்டிச் சென்றுள்ளார். இவர்களை கண்டதும் பயத்துபோன சுகுமார் அங்கிருந்து தப்பியோடினார். வேகமாக ஓடிவந்த சுகுமார், சயானி பேருந்து நிலையம் எதிரேவுள்ள ஈஸ்டன் ஷூ கடையினுள்ளே நுழைய முயன்றார்.
அப்போது அங்கிருந்த கண்ணாடி கதவை கவனிக்காமல் அதன் மீது மோதியதில் கீழே விழுந்துள்ளார். இதில் கண்ணாடி முழுவதுமாக உடைந்து பின் கழுத்து மற்றும் காலில் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதனைக் கண்ட ஷூ கடையின் உரிமையாளர் அங்கிருந்து பயந்து வெளியே ஓடிவிட்டார். இதையடுத்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மயங்கி கிடந்த சுகுமாரனை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழும் காட்சி சுகுமாரன் செல்ஃபோனை உண்மையிலேயே திருடினாரா அல்லது முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்ய முயன்றார்களா என்பது குறித்து மாறன் உள்ளிட்ட அவரது நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கட்டட மேஸ்திரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் கைது