சென்னை:பூந்தமல்லி அடுத்த புளியம்படு பகுதியில் மோட்டார் சைக்கிளில் கேபிள் வயரை வைத்து கொண்டு ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்த நபரை, விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதில் அந்த நபர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த நபருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.