தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Cm House bomb threat: முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது - MK Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியை ஏற்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி இளைஞரை சென்னை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 19, 2023, 8:15 AM IST

Updated : Aug 19, 2023, 4:46 PM IST

சென்னை:மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி இளைஞரை கைது செய்த போலீசார் அவரது பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். உடனே துணை ஆணையர் சமே சிங் மீனா தலைமையில் தேனாம்பேட்டை போலீசார் சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சுமார் 1 மணி நேரமாக சோதனையிட்ட போது வெடிகுண்டு மிரட்டல் போலியான தகவல் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணைக் கொண்டு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியிலிருந்து பேசியது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க:நீட் விலக்கில் மத்திய அரசு அசைந்து கொடுப்பது போல் தெரியவில்லை - பா.சிதம்பரம்

அதனைதொடர்ந்து, சென்னை போலீசார் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கிடைத்த போலீசார் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உச்சம் பாறை என்ற இடத்தை சேர்ந்த 30 வயதான இசக்கிமுத்து என்ற இளைஞரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் செய்த விசாரணையில் அந்த இளைஞர் குடிபோதையில் பேசியதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த இளைஞர் கடந்த ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி 20 ஆகிய நாட்களில் இதுபோன்று மதுபோதையில் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அந்த விசாரணையில், மதுபோதையில் என்ன செய்கிறோம்? என்று தெரியாமல் இவ்வாறு செய்துள்ளதாக கூறியதால் அவரை எச்சரித்து காவல் துறையினர் விடுவித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக கூறியதை அடுத்து காவல் துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் போலீஸ் ஸ்டிக்கரை ஒட்டி காரில் ஊர்வலம்.. கொத்தாக சிக்கிய ரவுடிக் கும்பல்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான போலியான தகவலை அறிந்த ஏராளமான பொதுமக்களும், திமுகவினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தேனாம்பேட்டை பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் போலீஸ் ஸ்டிக்கரை ஒட்டி காரில் ஊர்வலம்.. கொத்தாக சிக்கிய ரவுடிக் கும்பல்!

Last Updated : Aug 19, 2023, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details