புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அவசர ஊரதி மூலம் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தப்பட்டுவதாக புதுச்சேரி வில்லியனூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுச்சேரி டூ தமிழ்நாடு! மதுபாட்டில்களோடு விரைந்த ஆம்புலன்ஸ்: மடக்கிப் பிடித்த போலீஸ்! - புதுச்சேரி குற்றச் செய்திகள்
புதுச்சேரி: அவசர ஊரதி மூலம் மது பாட்டில்கள் கடத்திவந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி டு தமிழ்நாடு! மதுபாட்டில்களோடு விரைந்த ஆம்புலன்ஸ்: மடக்கிப் பிடித்த போலீஸ்!
அதன்பேரில் காவல் துறையினர், அந்த அவசர ஊர்தியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தன.
இதனையடுத்து அவசர ஊரதி ஓட்டுநரை கைது செய்த காவல் துறையினர், சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.