சென்னை கீழ்பாக்கம் அழகப்பா சாலைக்கு அருகே உள்ள பிளாட்பாரத்தில் ஏழு வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் பிளாட்பாரத்தில் சிறுமி பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது எழும்பூர் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கி பணிபுரிந்து வரும் உன்னிகிருஷ்ணன் (54) என்பவர் குடிபோதையில் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.