தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CHENNAI AIRPORT: ஒரே நாளில் அதிக பயணிகளை கையாண்டு புதிய சாதனை

சென்னை விமான நிலையம் கடந்த டிச.23 ஆம் தேதி ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

CHENNAI AIRPORT
ஒரே நாளில் அதிக பயணிகளை கையாண்டு புதிய சாதனை!

By

Published : Jan 7, 2023, 11:34 AM IST

சென்னை: கரோனா ஊரடங்குக்குப்பின் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வருகை அதிகரித்தது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 15,85,199ஆக இருந்தது. நவம்பர் மாதம் விமானங்களின் எண்ணிக்கை 10,889ஆக இருந்தது.

டிசம்பரில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, சென்னை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 17,22,496ஆக இருந்தது. குறிப்பாக சென்னை விமான நிலைய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு டிச.23 ஆம் தேதி, சென்னை உள்நாட்டு விமான நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் பயணிகள் வருகை புறப்பாடு, ஒரே நாளில் 60,375ஆக பதிவாகியது.

கரோனா காலத்திற்கு முன்னதாக 2019 ஆண்டில் கூட டிசம்பர் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரமாகவே இருந்தது. சென்னை விமான நிலையத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்து வருகிறது. சென்னைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் தற்போது சென்னை - பாரிஸ் இடையே, வாரத்தில் 3 நாட்கள் விமானங்களை இயக்கி வருகிறது. வரும் மார்ச் மாதத்தில் இருந்து வாரத்தில் 5 நாட்களாக விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது.

அதேபோல் லூப்தன்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வாரத்தில் 3 நாட்கள் சென்னை - பிராங்க்பார்ட் இடையே, விமானங்களை இயக்குகிறது. இனி வாரத்தில் 5 நாட்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தியாட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தற்போது, வாரத்துக்கு 7 விமான சேவைகளை இயக்குகிறது. இனி வாரத்தில் 14 சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏர் ஆஸ்ட்ரல் விமான நிறுவனம் செயின்ட் டெனீசுக்கு, வாரத்தில் ஒரு நாள் மட்டும் விமான சேவைகளை இயக்குகிறது. இனிமேல் அது வாரத்தில் 2 நாட்கள் இயக்க முடிவு செய்திருக்கிறது.

இதையும் படிங்க: உக்ரைனுக்கு 2.85 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details