கரோனா தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவும் வகையில் ஊடுகதிர் (எக்ஸ்ரே) இயந்திர வசதிகள் கொண்ட மருத்துவர்கள், வாட்ஸ்அப் செயலி வாயிலாக மார்பு ஊடுகதிர் அறிக்கையைப் பெறுவதற்கு, ஒரு புதிய செயற்கை நுண்ணறிவால் இயங்கும் வகையில் இந்த இணையதளம் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.
'எக்ஸ்ரே சேது' என்று அழைக்கப்படும் இந்த இணையதளத்தில், தெளிவு அதிகம் இல்லாத ஊடுகதிர் படங்கள், செல்போன் வாயிலாக அனுப்படுகின்றன. விரைவாகவும், எளிதாகவும் பயன்படுத்தப்படுவதுடன், ஊரகப் பகுதிகளில் தொற்றைக் கண்டறியவும் ஏதுவாக இருக்கிறது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன், பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தால் லாப நோக்கமல்லாத அமைப்பாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பப் பூங்கா (ஆர்ட்பார்க்), பெங்களூருவில் இயங்கும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான நிரமை, இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் அதிகம் தெளிவில்லாத மார்பு ஊடுகதிர் படங்களில் கரோனா தொற்றை கண்டறிவதற்காக எக்ஸ்ரே சேது பயன்படுத்தப்படுகிறது.